பெண்களை பராசக்தியாய் பார்த்த மகாகவி பாரதியின், சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகளை வடிவமாய் கொண்ட பட்டுபுடவை, பெண் கடவுளை ஓவியமாய் தீட்டிய ராஜா ரவிவர்மாவின் ஹம்சதமயந்தி ஓவியத்தை கண்முன் நிறுத்திய காஞ்சிபட்டு, பெண்ணே நீ வண்ணமயமானவள் என்று சொல்லாமல் சொல்லும் 50,000 வண்ணங்கள் கொண்ட பட்டுபுடவை மற்றும் சிறுமியருக்கான பட்டு பாவாடையில் தேவதை கதைகள் என்று பெண்களை கொண்டாடும் விதத்தில் RmKV புகுத்திய சில புதுமைகள் இவை.
தொண்ணூற்றி ஏழு வருட பட்டு பாரம்பரியம் கொண்ட RmKV, பணிக்குச் செல்லும் அழகு தேவதைகளுக்கென உடைகள் வடிவமைப்பதிலிருந்து துவங்கி, புடவைகள் வரை அனைத்திலும் பாரம்பரியத்தில் புதுமை சேர்த்து பெண்களை பெருமைப்படுத்துவதில் முன்னோடியாக திகழ்கிறது..
மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம்.. ஆனால் RmKV யிலோ வருடம் முழுவதும் மகளிர் தினம்தான். பட்டுபுடவைகள் என்றால் தமிழகத்தின் காஞ்சி பட்டு மட்டுமின்றி, Silks of India என்று பிரத்யேகமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் சிறப்பு பட்டுகளை தருவித்து பட்டின் மேன்மையையும். நெசவாளர்களின் கலைத்திறனையும் கௌரவப்படுத்தியது.
திருநெல்வேலியில் துவங்கிய RmKV யின் பட்டுப்பயணம் சென்னை பனகல் பார்க் வந்தடைந்து, கோவையிலும் கால்பதித்து, அங்கிருந்து வடபழனி மற்றும் வேளச்சேரியில் கிளை பரப்பி, கன்னடத்து பைங்கிளிகளை சந்திக்க பெங்களூரு சென்றது.
RmKV யின் தொண்ணூற்றுஏழு வருட பாரம்பரியம், ஐந்து தலைமுறைக்கும் மேலாக பெண்களின் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறது.
திருமணத்தின் ஒவ்வொரு வைபவத்திற்கும் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட Bridal Seven Collection பட்டுபுடவைகள் மற்றும் சுடிதார், குர்தா வகைகள் என்று பெண்களுக்கு நிறைவை தரக்கூடிய ஆடைகளை அள்ளி வழங்குவதில் RmKVக்கு நிகர் RmKV மட்டுமே.
பெண் நெசவுக் கலைஞர்களை பாராட்டி ஊக்குவிக்கும் தருணம்
RmKV மற்றும் SEWA Trade Facilitation Centre இணைந்து நடத்திய Karigar கண்காட்சி. தெற்காசியநாடுகளின் கைவினைப்பொருட்களை நம் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா, ஆப்கானிஸ்தான். பூட்டான், பாகிஸ்தான், நேபாளம் பங்களாதேஷ் நாடுகளின் கைவினை கலைஞர்களை ஒன்று சேர்த்தது இந்த கண்காட்சி. ஆப்கானிஸ்தானின் Baluchi Kandaharjoshi Embroidery நேபாளத்தின் டாக்கா நெசவு, பூட்டானில் இருந்து Sapma மற்றும் Tigma நெசவுகள், பாகிஸ்தானில் இருந்து Jisti Embroidery இந்தியாவின் குஜராத்தில் இருந்து கண்ணாடி மற்றும் Patch Work நிரம்பிய ஆடைகள் இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சங்களாகும்.
பூட்டானின் அற்புதமான பெண் நெசவுக்கலைஞர் தனது இல்லத்திற்கு வருகை தந்திருக்கும் ஆர்வலர்களுக்கு “டிக்மா” முறையில் நெசவு செய்வதை, நெய்து விளக்கும் காட்சி
பழைய நெசவுக் கலையை எளிதாக்கும் புதிய முயற்சி
பெண் நெசவாளர்களை ஊக்குவித்து அவர்களின் கைத்தறி நெசவுத் திறனை பாராட்டினாலும், கைத்தறி நெசவு நிறைய புதுமைகளை கண்டிருந்தாலும், நெசவு நெய்யும் முறைகளை எளிதாக்க முடியவில்லை அதில் தடைகள் இருக்கத்தான் செய்தது.
இந்த தடைகளை தகர்க்க RmKV உருவாக்கியதுதான் Modernised Pneumatic HandLoom (MPHL)
One of the weavers in our training programme learning how to operate the MPHL, which complements timeless human skills with modern technology.
Photo courtesy: New Indian Express
பெண்மையையும் பெண்களையும் கொண்டாட அவர்களின் ஆடைகளை உருவாக்குவதுடன் RmKV யின் புது முயற்சிகள் நிற்கவில்லை அந்த ஆடைகளை உருவாக்கும் பெண் நெசவாளர்களுக்கு உதவும் விதமாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட MPHL தொழில்நுட்பம் பெண் நெசவாளர்களுக்கு RmKV அளித்த வரப்பிரசாதம்.
பன்னெடுங்காலமாக, வழக்கத்தில் முப்பது கிலோ எடை உள்ள பலகையை காலால் உயர்த்தி தாழ்த்தி, பட்டுபுடவைகள் நெய்யும் பெண்களுக்கு, இந்த MPHL தொழில் நுட்பம் ஒரு பெரியவரம், பெண்நெசவாள்ரகள் புடவை நெய்யும் பொழுது எற்படும் உடல் சோர்வை குறைத்து மேலும் துரிதமாக அவர்களை பணிபுரிய உதவுகிறது.
RmKV மற்றுமொரு புதுமையை அறிமுகப்படுத்தியது அது Electronic Jacquard Controller, எனும் கருவி, அது நெசவாளர்களின் உடல் உழைப்பை மிகவும் குறைப்பதால் வளரும் இளம் தலைமுறை பெண்களும் நெசவு தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கிறது.
RmKV அறிமுகப்படுத்திவரும் புதுமைகள், நலிந்துவரும் நெசவுதொழிலை மேம்படுத்தவும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண் நெசவாளர்களுக்கு ஒரு மாபெரும் வரம் என்று சொல்லலாம்.
பெண்களால். பெண்களுக்கு உருவாக்கப்பட்ட ஆடைகள், அணிபவர்களுக்கும் அழகு சேர்த்து உருவாக்கியவர்களுக்கும் பெருமை சேர்க்கிறது.
தாய், தமக்கை, தாரம், மகள், மற்றும் பேத்தி என்று நம் வாழ்வில் இன்றியமையாத பெண்களின் பங்கு போற்றப்பட வேண்டிய ஒன்று. அலுவலகம் செல்லும் பெண்ணோ, அரசாளும் பெண்ணோ, வீட்டை போற்றிபாதுகாக்கும் பெண்ணோ, யாராக இருந்தாலும் மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற மகாகவியின் வரிகளுக்கு அர்த்தமாய் விளங்குகிறார்கள்.
இவ்வுலகின் அனைத்து பெண்களுக்கும் RmKV யின் வணக்கங்கள் மற்றும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.